கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம்... சீன அதிபருக்கு தமிழக கலாசாரப்படி வரவேற்பு!

திருவான்மியூரில் செண்ட மேளக் கச்சேரி மூலம் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம்... சீன அதிபருக்கு தமிழக கலாசாரப்படி வரவேற்பு!
  • Share this:
தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னை வந்தடையும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளோடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, விமான நிலையம் முதல் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 6,800 பேர் வரவேற்பு அளிப்பார்கள். கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அதிமுகவினர், சாலையின் இருமருங்கிலும் காத்திருந்து மூவர்ணக் கொடியையும், சீன கொடியையும் அசைத்து உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். அதோடு, விமான நிலையம் முதல் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரை செண்ட மேளம், கோவை டிரம்ஸ் மற்றும் வட இந்திய நாசிக் டோல் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் சீன அதிபரை வரவேற்கும் வகையில், நுழைவு வாயிலில் வாழை மற்றும் கரும்பிலான பிரமாண்ட வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு தரைவழி மார்க்கமாக செல்லும்போது, சுமார் 50,000 பேர் வழிநெடுகிலும் வரவேற்பு அளிப்பார்கள்.

ஐடிசி ஹோட்டல் முன்பு பாரம்பரிய நாதஸ்வர கச்சேரியும், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டம் மற்றும் டிரம்ஸ் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம் குழுவினரின் அசத்தலான கலைநிகழ்ச்சியும், மத்திய கைலாஷில் மதுரை கரகாட்டமும் அரங்கேறும். திருவான்மியூரில் செண்ட மேளக் கச்சேரி மூலம் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதேபோல் கந்தன்சாவடி முதல் கோவளம் வரை பேண்ட் வாத்தியம் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

திருவிடந்தை பகுதியில் மயிலாட்டமும், புலிக்குகை பகுதியில் துடும்பாட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நுழைவு வாயிலில் நாதஸ்வரம் மற்றும் மதுரை கலைநிகழ்ச்சிகள் மூலம் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதுமாமல்லபுரத்தில் பனை ஓலைகளால் ஆன வளைவும், அர்சுனன் தபசு பகுதியில் மலர்களால் ஆன வளைவும், ஐந்து ரத சாலையில் காய்கறிகளால் ஆன வளைவும் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .

Also Watch

First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்