ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உங்கள் பிள்ளைகளின் வருங்காலத்திற்காக ஒவ்வொரு பெற்றோரும் இதை செய்திடுங்கள்!

உங்கள் பிள்ளைகளின் வருங்காலத்திற்காக ஒவ்வொரு பெற்றோரும் இதை செய்திடுங்கள்!

 பெண் குழந்தை பிறந்த உடனேயே இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் நல்ல வருவாய் கிடைக்கும்.

பெண் குழந்தை பிறந்த உடனேயே இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் நல்ல வருவாய் கிடைக்கும்.

பெண் குழந்தை பிறந்த உடனேயே இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் நல்ல வருவாய் கிடைக்கும்.

 • 1 minute read
 • Last Updated :

  வீட்டில் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு கட்டாயம் இந்த திட்டம் கைக்கொடுக்கும்.

  சுகன்யா சம்ரிதி திட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்காக இந்த திட்டத்தை தொடங்கிவிடுங்கள். நீண்டகால சேமிப்பு திட்டமான இதில் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும் உள்ளது.

  உங்களுக்கு பெண் குழந்தை பிறந்த உடனேயே இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் நல்ல வருவாய் கிடைக்கும். எஸ்.எஸ்.ஒய் கணக்கில் அசல் தொகை கிடைக்கும். பெற்றோர்கள் சுகன்யா சம்ரிதி கணக்கில் குழந்தையின் 14 வயது வரை முதலீடு செய்ய வேண்டும்.

  ஒருவேளை நீங்கள் முதலீட்டைத் தொடங்க தாமதமாகிவிட்டால், இத்திட்டத்தில் பெண் குழந்தையின் 14 வயதுக்கு பிறகு முதலீடு செய்ய முடியாது. அப்படி என்றால் எஸ்.எஸ்.ஒய் கணக்கில் அசல் தொகை குறையும். இந்த திட்டத்தில் இணைந்த பிறகு

  பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெற முடியாது. சுகன்யா சம்ரிதி கணக்கு முதிர்வு நேரத்தில் உங்களுக்கு மொத்த தொகை தேவையில்லை என்றாலும், முதிர்வுத் தொகையைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. தேவைப்பட்டாலும் சேமிப்பு காலத்தை நீடிக்க முடியாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த திட்டத்தில் சேமிப்பு ஆண்டுகள் முடிந்த பின்பு முதலீட்டாளர்கள் 50 சதவீதத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார், மீதமுள்ள 50 சதவிகிதம் முதலீட்டாளரின் மகளுக்கு 21 வயதாகும்போது திரும்ப பெறப்படும். பெண் குழந்தைகளுக்காக மிகச் சிறந்த சேமிப்பு திட்டத்தை தேடி கொண்டிருப்பவர்கள் இந்த திட்டத்தை நிச்சயம் தேர்வு செய்யலாம். தபால் நிலையங்களில் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஆன்லைனில் பார்க்கலாம் அல்லது ஒருமுறை போஸ்ட் ஆஃபிஸூக்கு நேரில் சென்றும் விசாரித்து வரலாம். பணத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: