லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி காசு பறித்த சிறார்கள் - சென்னை புறநகரில் பரபரப்பு

லாரி ஓட்டுநர்களை கத்தியால் வெட்டி காசு பறித்த சிறார்கள் - சென்னை புறநகரில் பரபரப்பு

லாரி

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இரவில் சாலையோரம் நிற்கும் லாரிகளின் ஓட்டுநர்களிடம் சிறார் கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது. பணம் கொடுக்க மறுத்தால், அரிவாள் வெட்டு வரை துணியும் அந்தக் கும்பல் பிடிபடுமா? என்ற கேள்வி லாரி ஓட்டுநர்களிடையே எழுந்துள்ளது.

 • Share this:
  சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இரவில் சாலையோரம் நிற்கும் லாரிகளின் ஓட்டுநர்களிடம் சிறார் கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது. பணம் கொடுக்க மறுத்தால், அரிவாள் வெட்டு வரை துணியும் அந்தக் கும்பல் பிடிபடுமா? என்ற கேள்வி லாரி ஓட்டுநர்களிடையே எழுந்துள்ளது.

  சென்னை புறநகர்ப் பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் லாரி ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. லாரிகளில் படுத்து ஓய்வெடுக்கு்ம ஓட்டுநர்களை பணம் செல்போன் கேட்டு அரிவாள், கத்தியால் தாக்கும் சிறார் கும்பல் தாக்குவதாக தகவல்கள் தெரிவிக்க்கின்றன. சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.

  சரக்கு லாரி ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் பெரும்பாலும் இந்த சுங்கச்சாவடி அருகே லாரிகளை நிறுத்தி விட்டு ஓய்வெடுப்பது வழக்கம். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தூத்துக்குடியைச் சேர்ந்த 57 வயதான கோமதிநாயகம், கடலூரைச் சேர்ந்த 37 வயதான முருகன், கிருஷ்ணகிரியை சேர்ந்த 35 வயதான கார்த்தி ஆகிய 3 ஓட்டுநர்களும் தங்கள் லாரியை சுங்கச்சாவடி அருகே ஓரமாக நிறுத்திவிட்டு அதிலேயே ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர்.

  அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 சிறுவர்கள் லாரியில் ஏறி பட்டாக்கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஓட்டுநர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், லாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அதோடு நிற்காமல் மேலும், ஆத்திரமடைந்த சிறுவர்கள் 3 பேரையும் கத்தியால் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கி வெட்டியுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 19 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

  படுகாயமடைந்த லாரி ஓட்டுனர்கள் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். கோமதிநாயகம், முருகன், கார்த்திக் மூவரையும் அம்பத்தூர் போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையோரம் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுப்பதற்குக் கூட பாதுகாப்பில்லை எனவும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  லாரி ஓட்டுநர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமாக லாரி ஓட்டுநர்களைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சிறார் கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: