Home /News /tamil-nadu /

கொரோனாவால் தந்தையை இழந்த குழந்தைகள்.. அரசின் நலத்திட்ட பலன்கள் கிடைக்காமல் தவிப்பு

கொரோனாவால் தந்தையை இழந்த குழந்தைகள்.. அரசின் நலத்திட்ட பலன்கள் கிடைக்காமல் தவிப்பு

கோவிட்

கோவிட்

கூரை வீட்டில் இருக்க வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை நீக்கினால் மேலும் பல குழந்தைகள் இத்திட்டத்தில் சேர முடியும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு நிதியுதவி மற்றும் காப்பக வசதி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 

ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சமும், தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியாகவும் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.இத்திட்டத்தின் கீழ் இதுவரை 92 குழந்தைகள் தாய் தந்தை இருவரையும் 3409 குழந்தைகள் ஒரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆனால் நாடகக் கலைஞர் கிருஷ்ணனின் இறப்பு கொரோனா இறப்பாக அறிவிக்கப்படாததால் அவரை இழந்து வாடும் மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவிக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்  அருகே அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது கிருஷ்ணன். நாடகங்கள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அவர் மத்திய தகவல் ஒலி பரப்பு அமைச்சகத்தின் ‘சமூகச் செம்மல்' விருதை 2019ல் பெற்றார். அவருக்கு கடந்த மே மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மே 26ம் தேதி உயிரிழந்தார்.

Also Read:  24 வருட தேடல்.. 5 லட்சம் கிலோமீட்டர் பயணம்.. கடத்தப்பட்ட மகனை கண்டுபிடித்த பாசக்கார தந்தை

அவருக்கு மூச்சு திணறல் காய்ச்சல் ஆக்சிஜன் அளவு குறைதல் என கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகள் இருந்தும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை நெகடிவ் என வந்தது. அவரை போன்று நெகடிவ் வந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அவர் viral pneumonia வால் உயிரிழந்தார் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா என குறிப்பிடவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அரசின் எந்த நிவாரணத்தையும் பெற முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவருக்கு 21 வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும் 16 வயதில் மகனும் 13 வயதில் மகளும் உள்ளனர். அவரது மனைவி சுமதி பள்ளிப்படிப்பை முடிக்காதவர். அவ்வபோது ஏதாவது கூலி வேலைக்கு சென்று வருகிறார். அரசு தன் தந்தையின் இறப்பை கொரோனா இறப்பாக கருதி நிவாரணம் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும் என மூத்த மகள் பிரியதர்ஷினி கூறுகிறார். தன் கணவர் மட்டுமே குடும்பத்துக்கு வருமானம் ஈட்டி வந்ததாகவும் படிக்காத தனக்கு 46 வயதில் யார் வேலை தருவார்  குடும்பத்தை எப்படி நடத்துவது என தெரியாமல் தவிப்பதாக அவரது மனைவி சுமதி கூறுகிறார்.

Also Read:  Vadivelu : மு.க.ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது.. நடிகர் வடிவேலுவின் அசத்தல் பதில்

இது மட்டுமல்லாமல், பலருக்கு மருத்துவமனையில் சேரும் போது பாசிடிவ் எனவும் உயிரிழப்பதற்கு முன் நெகடிவ் என வருவதால் அந்த இறப்புகளும் கொரோனா இறப்புகளாக  சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியனின் இறப்பும் கொரோனா இறப்பாக கருதப்படாது. ஆர் டி பி சி ஆர் பாசிடிவ் அறிக்கையும், கொரோனாவால் உயிரிழந்ததாக இறப்பு சான்றிதழ் வைத்திருந்தாலும் கூட இத்திட்டத்தில் அனைவராலும் சேர முடியாது.

அரசு அறிவித்திருக்கும் திட்டத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்திருந்தால் வருமான வரம்பு இல்லாமல் அவர்களுக்கு நிதி வழங்கப்படும். ஒரு பெற்றோரை மட்டும் இழந்திருந்தால் அவர் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும். இறந்தவர் அரசு ஊழியரோ, பொதுத்துறை ஊழியரோ அல்லது அரசு பங்கு உள்ள நிறுவனத்திலோ பணிபுரிந்தால் அவர்களின் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர முடியாது.

" கூரை வீட்டில் இருக்க வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை நீக்கினால் மேலும் பல குழந்தைகள் இத்திட்டத்தில் சேர முடியும். இன்று வசதியாக இருப்பவர்கள் நாளை வசதி இல்லாமல் போகலாம். இது போன்ற விதிகளை தளர்த்தி பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் " என்கிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன்.

அரசு அறிவித்திருக்கும் இத்திட்டம் வெகுவாக வரவேற்கப்பட்டாலும் இதில் மேலும் பல குழந்தைகளை சேர்க்கும் வகையில் திட்டத்தை விரிவுப்படுத்தலாம் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Children, Corona death, Corona positive, Covid-19, Government, Welfare scheme

அடுத்த செய்தி