கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: தத்தெடுக்கும் வழிமுறை என்ன? போலி விளம்பரங்களால் ஏமாறாதீர்கள் – அரசு எச்சரிக்கை

cara.nic.in என்ற தேசிய தத்தெடுப்பு இணையத்தில் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் கழித்தே அவர்களுக்கு குழந்தை தத்து கொடுக்கப்படும்.

cara.nic.in என்ற தேசிய தத்தெடுப்பு இணையத்தில் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் கழித்தே அவர்களுக்கு குழந்தை தத்து கொடுக்கப்படும்.

  • Share this:
கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க பலரும் விரும்புகிறார்கள். அவர்கள், போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கொரோனாவினால் தமிழகத்தில் மட்டும் 92 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். 3409 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்துள்ளனர். இக்குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தத்தெடுத்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் வாழும் தம்பதிகளுக்கே தத்து கொடுக்கப்படும். அவர்கள் cara.nic.in என்ற தேசிய தத்தெடுப்பு இணையத்தில் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் கழித்தே அவர்களுக்கு குழந்தை தத்து கொடுக்கப்படும்.

இதில், 6 வயதுக்கு அதிகமான சிறுவர் மற்றும் சிறுமியரை தத்தெடுக்கும்போது Foster Care எனப்படும் ‘தற்காலிக பராமரிப்பு’ என்ற முறை பின்பற்றப்படுகிறது. பச்சிளம் குழந்தையை தத்தெடுக்கும் நடைமுறையை விட இது எளிதானதும், விரைவானதும் ஆகும். குழந்தைகள் இல்லாதவர்கள் மட்டுமல்லாது ஏற்கனவே குழந்தை உள்ளவர்களும் கூட, 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தையை தத்தெடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வருமான வரம்பு எதுவும் இல்லை. தத்தெடுப்பதற்காக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. குழந்தையை பாதுகாப்பாக, நல்ல முறையில் வளர்ப்பதற்கான சூழல் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினாலே போதுமானது.

இது குறித்து சென்னை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் கார்த்திக் கூறும்போது, “சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களைப் பார்த்து, விதிமுறைகளுக்கு மாறாக குழந்தைகளை தத்தெடுப்பது சட்ட விரோதமானது. கடத்தலுக்கு சமமாகிவிடும். எனவே இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடவோ, தத்தெடுத்தல் மேற்கொள்ளவோ கூடாது.

அப்படியான விளம்பரங்களை பார்த்தால் அதுகுறித்த தகவலை 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்" என்றார்.குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் நல்ல எண்ணத்துடன் வரும் பெற்றோருக்கு  தத்தெடுப்பு நடைமுறைகளில் அரசே உதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read: மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் நிதி மற்றும் காப்பக உதவிகள் தரப்படுகின்றன. இதனை வரவேற்கும் அதே சமயம், குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பும் முக்கியம் ஆகும். இதுகுறித்து குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் பேசும்போது, “ ஒரு குழந்தை காப்பகத்தில் இருப்பதை விட குடும்பத்துடன் இருக்கும் போது தான் முழு கவனமும் அரவணைப்பும் கிடைக்கும். சுனாமி போன்ற பேரிடருக்கு பிறகு மாற்று பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தனர். அதே போன்று தற்போதும் குழந்தைகளை தத்தெடுக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் “ என்றார்.

மாற்று பராமரிப்பில் குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
Published by:Esakki Raja
First published: