பாலியல் சர்ச்சைக்கு உள்ளான சுஷீல் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக் குழு பரிந்துரை!

கோப்புப் படம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பள்ளி பயிலும் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.

  • Share this:
    சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் , அவரது சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என குழந்தைகள் நலக் குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை புகார் குறித்து. கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் 5 பேர் விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளி நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், பள்ளியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சீடர்களிடமும், ஊழியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளியில் இருந்து 4 லேப்டாப், கணினி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே சுஷில்ஹரி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பலர் மூன்றாம் நாளாக பெற்றோருடன் வந்து மாற்றுச் சான்றிதழ் கேட்டனர். நடப்பு ஆண்டு கட்டிய கல்விக் கட்டணத்தையும் திரும்பத் தர வலியுறுத்தினர். சான்றிதழ் பெற படிவத்தை நிரப்பிக் கொடுக்குமாறு கூறிய பள்ளி நிர்வாகம், ஒரு வாரத்திற்குள் மாற்றுச் சான்றிதழ் தரப்படும் என கூறியுள்ளது. பள்ளியின் தங்கும் விடுதியில் உள்ள மாணவர்களை, அரசு அனுமதியுடன் இயங்க கூடிய வேறு இடத்திற்கு இடம் மாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சுஷில் ஹரி பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களை, வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளிக் கவ்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் சிவசங்கர் பாபா குழந்தைகள் நலனுக்கு எதிராக செயல்பட்டதுடன், பள்ளி நிர்வாகமும் அதற்கு உடந்தையாக இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இதில் தொடர்புடையவர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டு, அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: பிளஸ் 2 மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? சிபிஎஸ்இ விளக்கம்...
    Published by:Murugesh M
    First published: