சுர்ஜித் மீட்கப்படுவது பற்றி தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தேன் - பிரதமர் மோடி

சுர்ஜித் மீட்கப்படுவது பற்றி தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தேன் - பிரதமர் மோடி
எடப்பாடியுடன் பிரதமர் மோடி.
  • News18
  • Last Updated: October 28, 2019, 3:54 PM IST
  • Share this:
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்படுவது பற்றி தமிழக முதல்வரிடம் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். 29 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

மாநில மீட்பு படையினர் மற்றும் தனியார் மீட்பு குழுவினர் முயன்று சிறுவனை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல்வேறு வழிகளில் முயன்று பார்த்தனர். ஆனால், சிறுவனை மீட்பதில் பின்னடைவே ஏற்பட்டது.


சிறுவன் தற்போது 100 அடிக்கும் கீழே இருக்கிறான். மேலும், கீழே சென்று விடாமல் தடுக்க ஏர்லாக் மூலம் குழந்தை பிடித்து வைக்கப்பட்டுள்ளான். இதற்கிடையே, ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழி தோண்டும் பணி நடக்கிறது. தீயணைப்பு வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்படுவது பற்றி தமிழக முதல்வரிடம் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தான் பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

Loading...


First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...