குழந்தை சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராதா கிருஷ்ணன் விளக்கம்!

குழந்தை சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராதா கிருஷ்ணன் விளக்கம்!
வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: October 28, 2019, 11:40 AM IST
  • Share this:
எந்த நிலையிலும் மீட்புப்பணிகள் நிறுத்தப்படாது என்று சுர்ஜித் மீட்பு குறித்து வருவாய் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். 29 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

மாநில மீட்பு படையினர் மற்றும் தனியார் மீட்பு குழுவினர் முயன்று சிறுவனை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல்வேறு வழிகளில் முயன்று பார்த்தனர். ஆனால், சிறுவனை மீட்பதில் பின்னடைவே ஏற்பட்டது.


சிறுவன் தற்போது 100 அடிக்கும் கீழே இருக்கிறான். மேலும், கீழே சென்று விடாமல் தடுக்க அவன் கையில் கயிறு கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழி தோண்டும் பணி நடக்கிறது. தீயணைப்பு வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

இரண்டாவதாக இயந்திரம் ஒன்று கொண்டு வரப்பட்டாலும் புதிதாக துளையிடும் இடத்தில் அதிக பாறைகள் இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது. தற்போது வரை 40 அடி வரை தோண்டப்பட்டுள்ளது. ஆனால், 90 அடி வரை தோண்டப்பட வேண்டும்.

சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட தமிழகத்தின் பல இடங்களிலும் கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

Loading...

அவர் கூறுகையில், “சிறுவனை மீட்க வல்லுனர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். துளையிடும் பகுதி பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் அதிக திறன் கொண்ட ரிக் இயந்திரத்தை வைத்து பாறைகளை துளையிடுவது சவால் நிறைந்ததாக உள்ளது.

குழந்தை சுஜித் 4.5 இன்ச் அகலமுள்ள ஆழ்துளையில் பாறை பகுதியில் 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளார், நேற்றைய முன் தினம்‌ காலை 5.30 மணிக்கு பிறகு குழந்தையுடைய நிலையை கண்டறிய முடியவில்லை, தொடர்ந்து துளையிடும் பணி எல்&டி வல்லுனர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.

ஆழ்துளையில் உள்ள குழந்தை மீட்பு குறித்தும் அதில் ஏற்படும் சாவால்கள் குறித்தும் உண்மை தன்மையுடன் அவ்வப்போது குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் ரீதியாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. எந்த நிலையிலும் மீட்பு பணி நிறுத்தப்படாது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...