அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை மித்ரா - மத்திய அரசின் வரி தள்ளுபடிக்காக காத்திருப்பு

குழந்தை மித்ரா

மருந்து வாங்க தேவையான 16 கோடி நிதி திரட்டப்பட்டு முடிந்தது.மருந்துக்கான வரியை தள்ளுபடி செய்ய மத்திய சுகாதார மற்றும் நிதி அமைச்சகத்திடம் குழந்தையின் பெற்றோர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

  • Share this:
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை மித்ராவுக்கு  மருந்து வாங்க தேவையான 16 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மீது 6 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு விண்ணப்பித்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் குழந்தையின் பெற்றோர்கள்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்- பிரியதர்ஷினியின் 2 வயது மகள் மித்ரா. குழந்தைக்கு SMA எனப்படும் spinal muscular atrophy அரிய வகை மரபணு நோயால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய்க்கு நிரந்தர தீர்வளிக்கும் Zolgensma எனும் Novartis நிறுவனத்தின் மருந்து இந்தியாவில் கிடைப்பதில்லை. இதை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து தான் பெற வேண்டும். இந்த மருந்தின் விலை மட்டுமே ரூ 16 கோடியாகும்.

Also Read:  அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் தந்தை!

இந்தியாவில் இதற்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி ரூ.6 கோடியாகும்.
மருந்துக்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தை குழந்தையின் பெற்றோர்கள் மேற்கொண்டு வந்தனர். பல பிரபலங்கள் இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மருந்து வாங்க தேவையான 16 கோடி நிதி திரட்டப்பட்டு முடிந்தது.
மருந்துக்கான வரியை தள்ளுபடி செய்ய மத்திய சுகாதார மற்றும் நிதி அமைச்சகத்திடம் குழந்தையின் பெற்றோர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே இதே போன்று SMA நோயால் பாதிக்கப்பட்டு மருந்து வேண்டிய குழந்தைக்கு மத்திய அரசு வரியை தள்ளுபடி செய்துள்ளது என்பதால் தங்களுக்கும் வரி சலுகை விரைவில் கிடைக்கும் என பெற்ரோர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
பெங்களூரூவில் உள்ள BAPTIST மருத்துவமனை மூலம் மருந்து வாங்கி குழந்தை மித்ராவுக்கு செலுத்தப்படும். இந்த மருந்தை ஒரு முறை செலுத்தினாலே போதுமானது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: