சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..!

நேற்று அதிகாலை 4 மணியளவில் குழந்தைக் கடத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..!
குழந்தை கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி
  • News18
  • Last Updated: January 14, 2020, 10:20 AM IST
  • Share this:
நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தையை திண்டுக்கல்லில் போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த மார்சீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று தனது 2 வயது பெண் குழந்தை ரஷிதா மற்றும் நண்பர் அமித்வுடன் உறங்கி கொண்டிருந்தார்.

பின்னர் எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதா காணாமல்போனதால் பதறிய அவரது தாய், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அவர்களுடன் வந்த அமித்தின் நண்பர் தீபக் மண்டல் என்பவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.


இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தை ர‌ஷிதாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். குழந்தையை கடத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டலை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க :

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய பெண் குழந்தை கடத்தல் 

 
First published: January 14, 2020, 9:52 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading