சென்னையில் குறையும் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை

மாதிரிப் படம்

சென்னையில் மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிள்ள நிலையில் மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூன்றாம் அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாம் அலையிலே சென்னையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சென்னை மாநகராட்சி வெளியிட்டுவரும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. படிப்படியாக தொற்று பரவல் குறையத்தொடங்கினாலும் பாதிக்கப்படும் குழந்தைகளின் சராசரி அதிகரித்துள்ளது

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் 30ஆம் தேதி நிலவரப்படி  சென்னையில் 31,222 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில்  1 முதல் 9 வயதுடைய குழந்தைகள் 2.04 சதவீதம். 636 பேர்.
இதே போல் கடந்த மே மாத இறுதியில் 31ஆம் தேதி 33,922 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2.45% குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். 800 பேர்.

இதுவே நேற்றைய நிலவரப்படி சென்னையில் 12,210 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 0 -9 வயதுடைய குழந்தைகள் 2.17 சதவீதம். அதாவது  260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏப்ரல் இறுதியில் 2.04 சதவீதமாக இருந்த குழந்தைகளுக்கான பாதிப்பு விகிதம் மே இறுதியில் 2.45 சதவீதமாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 2.17 சதவீதமாக உள்ளது. மே மாதத்தை ஒப்பிடும் போது ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி குழந்தைகள் பாதிக்கப்படுவது சற்று குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
Published by:Karthick S
First published: