சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை, வேளாண்துறை, தொழிற்துறை உள்ளிட்ட 11 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் துர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
காவிரி வேளாண் மண்டலத்தை தொடர்ந்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வளமான தமிழகத்தை உருவாக்க வேளாண்மையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார். காவிரி டெல்டா பகுதிக்கு நீண்ட கால திட்டங்களை வகுக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசை விமர்சித்து விக்ரம் பாடல்... கமல் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார்...
மேலும், கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து போராடி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.