ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காந்திய மண்ணில் வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காந்திய மண்ணில் வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மரியாதை

முதலமைச்சர் மரியாதை

சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இணைந்து காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். 

  மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்று காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இணைந்து காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Birthday, Chennai, Chennai egmore, CM MK Stalin, Mahatma Gandhi, RN Ravi