Home /News /tamil-nadu /

"பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக் கூடாது" - அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து பேசிய முதல்வர்

"பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக் கூடாது" - அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து பேசிய முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

  • News18
  • Last Updated :
    அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

    துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அமைச்சர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதே போல் சசிகலா சிறையில் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார்.

    Also read... மோடியை தொடர்ந்து ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் ரஜினி... கர்நாடகா காட்டில் படப்பிடிப்பு

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கீரின்வேஸ் சாலை இல்லத்தில் அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தேவையில்லாத கருத்துகளை பொதுவெளியில் பேச வேண்டாமென அமைச்சர்களிடம் முதல்வர் பழனிசாமி கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chief Minister Edappadi Palanisamy

    அடுத்த செய்தி