தமிழக அரசு தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட உயா்அதிகாரிகள் டெல்லி பயணம்

தமிழக அரசு தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட உயா்அதிகாரிகள் டெல்லி பயணம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மத்திய அரசின் அழைப்பின் பெயரில் டெல்லியில் நடைபெற உள்ள யுபிஎஸ்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மத்திய அரசின் அழைப்பின் பெயரில் டெல்லியில் நடைபெற உள்ள யுபிஎஸ்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

  தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, தமிழக உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகியோர் இன்று காலை 6.30 மணிக்கு ஏா்இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டனர். அதே போல் காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா் ஆகியோரும் டெல்லி புறப்பட்டனர்.

  ஆண்டுதோறும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக, (Conferred ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி வந்துள்ளதாக தமிழக அரசின் சார்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா காரணமாக பதவி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக யுபிஎஸ்சி நடத்த வேண்டிய கூட்டம் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இதனால் conferred ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் கோப்புகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நிலுவையில் உள்ள பதவி உயர்வு தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், டெல்லி ஷாஜஹான் சாலையில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

  ஒவ்வொரு மாநிலத்தின் அதிகாரிகளுடன் தனித்தனியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் யாருக்கெல்லாம் பதவி உயர்வு வழங்கலாம் என மாநில அதிகாரிகளின் சார்பின் பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்கபடும். ஆலோசனைக்குப் பிறகு பதவி உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Ram Sankar
  First published: