விநாயகர் சதுர்த்தி விழா - இந்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது குறித்து 17 இந்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

விநாயகர் சதுர்த்தி விழா - இந்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!
விநாயகர் சிலை
  • Share this:
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சிறு, குறு கோயில்கள் மட்டும் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி பண்டிகை வருவதால் அதனை கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,  டிஜிபி திரிபாதி, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Also read... EIA 2020 வரைவை இறுதி செய்ய மத்திய அரசிற்கு இடைக்கால தடை - கர்நாடக உயர்நீதிமன்றம்


இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி தமிழகம், இந்து தமிழர் கட்சி, சிவசேனா, அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட 17 இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் விநாயகர் சதூர்த்தியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading