புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...!

புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...!

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தளர்வுகளுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழு நிபுணர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலையை வட இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கட்டாய முகக்கவசம், வார இறுதி நாட்களில் கடற்கரைகள் மூடல் என்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

  இருப்பினும் நோய் தொற்று நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும், மருத்துவ குழு நிபுணர்களுடனும் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  Also read... மீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...!

  ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு -  50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய  மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு!

  தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. தளர்வுகளுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: