கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழக அரசு தலைமைச் செயலகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது ஒரு மாத காலமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட பாதிப்பைவிட தற்போது அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3,500-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாக்குபதிவும் முடிவடைந்துள்ளது. இந்த சூழலில் கொரோன பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டி.ஜி.பி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடுத்த கட்ட கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

  நாளை பிரதமர் மோடியுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் பங்கேற்கிறார். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: