முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு - தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு - தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு

இறையன்பு

இறையன்பு

TN Government Employees : தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  “தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளன. இதனால் செயற்கை காலிப்பணியிடங்களை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Must Read : கன்னியாகுமரியில் காணாமல் போன 211 செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!

தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் இது தொடர்பான உத்தரவு அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இறையன்பு தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chief Secretary, Government Employees, Iraianbu IAS, Promotion