சென்னையில் தூய்மை பணியின்போது குப்பையில் கிடைத்த 100 கிராம் தங்கத்தை நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர் மேரிக்கு தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கணேஷ்ராமன்.கூரியர் ஊழியரான இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு கட்டிலின் அடியில் வைத்துள்ளார். இதனை அறியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்தபோது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். பின்னர் இது குறித்து அறிந்தது அதிர்ச்சியடைந்த கணேஷ்ராமன், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பாக தூய்மை பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவர், தங்க நாணயம் இருந்த கவரை கண்டார். உடனடியாக தனது மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்தார். சாத்தாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரி தங்க நாணயத்தை சரி பார்த்த பின்னர், துாய்மை பணியாளர் மேரி கையால் கணேஷ் ராமிடம் ஒப்படைத்தார்.
தூய்மை பணியாளர் மேரியின் நேர்மைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், மேரியை பாராட்டி தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
"அன்புள்ள மேரி அவர்களுக்கு,
தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மை பணியாளர் மட்டும்லல்ல , தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் நகை கடன் தள்ளுபடி: அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold, Iraianbu IAS, Sanitary workers