ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று அவசர ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று அவசர ஆலோசனை

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

சோதனைக்கு அனுப்பப்ட்ட 57 மாதிரிகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் ஒமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு அவசர ஆலேசானை நடத்த உள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பாக இருந்தது. இதையடுத்து அவருடன் தொடர்புடைய மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது.

  இந்நிலையில் சோதனைக்கு அனுப்பப்ட்ட 57 மாதிரிகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 மற்றும் சேலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 பேரின் மாதிரிகளின் முடிவு விரைவில் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக தற்போது உள்ளது

  தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விமான நிலையத்தில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியளார்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

  Also Read : விழுப்புரம் தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன்: துணியில் சுற்றி தூக்கிச் சென்ற வடமாநிலத்தவர்கள் யார்?

  இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை தடுப்பது குறித்தும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Omicron