ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடியரசு தின விழா கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவு

குடியரசு தின விழா கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு உத்தரவு

தலைமைச் செயலாளர் இறையன்பு

தலைமைச் செயலாளர் இறையன்பு

குடியரசு தின விழாவை ஒட்டி 15 அறிவுறுத்தல்களை தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குடியரசு தின விழாவில், பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்களுக்கு கொடியேற்றுவதில் ஏற்பட்ட சாதிய பாகுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி, விழாவில், பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் எவ்வித சாதிய பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும்,

கிராம சபைக் கூட்டங்கள் முடிந்ததும், பிரச்னையின்றி முடிந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்கு உடனுக்கு உடன் அனுப்ப வேண்டும் எனவும் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

Also read : ராமநாதபுரம் | முகவை சங்கமம் புத்தகத் திருவிழா- இலச்சினை, சின்னத்தை வெளியிட்ட ஆட்சியர்

அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா மற்றும் கிராம சபைக் கூட்டங்கள் எந்தவித புகாருமின்றி இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அறிவுறுத்தல்களை இறையன்பு வழங்கியுள்ளார்.

First published:

Tags: District collectors, Iraianbu IAS, Republic day