ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி

இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி

Alluvial Soil | விவசாயிகள் வண்டல் மண்ணை எடுப்பதற்கு அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டும், நீர் மட்டம் குறைந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில், நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  அதன்படி, விவசாயிகள் வண்டல் மண்ணை எடுப்பதற்கு அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஏரி, குளத்தில் எந்தெந்த பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என்பது குறித்து தொழில்துறை 2017ஆம் ஆண்டிலேயே அரசு ஆணை வழங்கியுள்ளது.

  காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் உள்ள நீா் வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் அறிவிக்கப்பட்ட ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரு மாதங்களுக்குள் அதாவது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Must Read : செங்கல்பட்டில் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி.. செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டதா? போலீஸார் விசாரணை

  வண்டல் மண்ணில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கும் என்பதால், விவசாயிகள் அதனை எடுத்து விளைநிலங்களில் கொட்டி பயன்படுத்துவதன் மூலம், மகசூலை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். மேலும், இவ்வாறு வண்டல் மண்ணை எடுப்பதன் மூலம் நீர் நிலைகளை ஆழப்படுத்தப்பட்டு மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Chief Secretary, Farmers, TN Govt