மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும், கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாது. நிதி ஆதாரத்தை திரட்ட திமுக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயர உள்ளதாக கூறினார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம், வரும் காலகட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு, மின்கட்டண உயர உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அப்படி கூறுவார்கள், நடக்கும்போது பார்க்கலாம். நிதி ஆதாரத்தை திரட்ட சொத்து வரி, பொது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தினால் அதனை செயல்படுத்தாதே என அதிமுக கூறுகிறது. கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி ஆளுங்கட்சியை எதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்வதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 30 ஆண்டுகாலமாக ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்து கொண்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் எந்த கட்டணமும் உயரவில்லையா? சிமெண்ட் விலை, ஜல்லி விலை, இரும்பு விலை கூடுவதாக எங்களை கேள்வி எழுப்பினார்கள். இவர்கள் ஆட்சி நடந்த 10 வருட காலத்தில் தான் அவை பல மடங்கு விலை உயர்ந்தது. எனவே, அது இயற்கையானது தான். இந்த நேரத்தில் என்ன முடிவெடுக்க வேண்டுமோ, அதற்கு ஏற்றாற்போல், முதல்வர் மக்கள் பாதிக்காத வகையில் முடிவெடுப்பார் என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: K.N.Nehru