கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

Youtube Video

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 • Share this:
  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

  தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாதந்தோறும் முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழு மற்றும் ஆட்சியர்களுடன் ஆய்வு நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

  அதன்பிறகு மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கிறார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிற வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

  மேலும் படிக்க...திருவள்ளூர் : ஒத்தையடி பாதை தகறாரில் ஆத்திரமடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை...  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: