கொரோனா பாதிப்பு குறித்து கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு...

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

 • Share this:
  தமிழகத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.

  பின்னர் திருப்பூர் செல்லும் அவர், 110 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும், 20 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து கோவை செல்லும் அவர், இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடும் முதலமைச்சர் மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

  மேலும் படிக்க... தேசிய புலானாய்வு முகமை காலிப்பணியிடம் அறிவிப்பு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: