• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அவசர கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்..!

அவசர கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்..!

அவசர கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்

அவசர கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்

கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

  • Share this:
    மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க சென்னையில் உள்ள எழிலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மழை, வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருந்த போது சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அமுதா என்பவர் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டார். அந்த அழைப்பை எடுத்து பேசிய முதலமைச்சர், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அப்பெண்ணிடம் உறுதி அளித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்ட சென்னை பாண்டிபஜார், தியாகராய நகர், மாம்பலம், வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது தியாகராய நகர் ஆலயம்மன் கோயில் அருகே உள்ள கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டார்.

    ஆய்வின்போது அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தயாநிதி மாறன் எம்பி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், திட்டம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்தார்.

    பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு தியாகராய நகரில், கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிகளை அகற்றும் பணியை ஆய்வு செய்ததாகவும், இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: