• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் - இலங்கை தமிழர் நலத்திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை

நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் - இலங்கை தமிழர் நலத்திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை, வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை, வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 106 முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்நிலையில், வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை அகதிகள் குடும்பங்கள் உள்பட, மூவாயிரத்து 510 பேருக்கு 142 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டி தரும் திட்டத்துக்கு, முதலமைச்ச்ர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கை அகதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு அடையாளத்திற்காக மட்டுமே இலங்கை தமிழர்கள் என குறிப்பிடுவதாகவும், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும், அவர்களுக்கான நலத் திட்டங்கள் மேலும் தொடரும் என்றும் கூறினார். இலங்கை தமிழர்களின் நலனுக்காக திமுக என்றும் துணை நிற்கும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.



    இதையடுத்து, இலங்கை தமிழர்களின் முகாமிற்கு சென்ற முதலமைச்சர், அங்கு உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகாமிலுள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டார். அப்போது, முகாமில் வசிக்கும் இளைஞர்களுடன் சேர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: