Home /News /tamil-nadu /

'போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும்' - முதலமைச்சர் ஸ்டாலின்

'போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும்' - முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

MKStalin : 'போதை என்பது தனி மனித பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை' போதைப்பொருள் பழக்கம் சமூகத் தீமை - முதலமைச்சர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் முடக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதலமைச்சர், தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே இந்த கூட்டத்தை இதுவரை கூட்டியுள்ளோம் ஆனால் முதல் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தற்போது கூட்டியுள்ளோம்.

    நமது அழிவு பாதையான போதை பொருளை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க வேண்டும். அதற்கான உறுதி எடுக்க வேண்டும். போதை மருந்துகள் மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும், பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். பயன்படுத்தவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழி ஆக்க வேண்டும்.

    இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை, மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டு குறைவு தான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை. போதை என்பது தனி மனித பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை. போதைப்பொருள் பழக்கம் சமூகத் தீமை. இதை அனைவரும் சேர்ந்து தான் தடுத்தாக வேண்டும்.

    ALSO READ | மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

     

    போதை மருந்தை பயன்படுத்துபவர் அதில் இருந்து விடுபட வேண்டும்.  விடுபட்டவர், போதைப் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப் பொருளை பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.  இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. இதே பணி, கல்லூரிகளின் நிர்வாகத்திற்கும் இருக்கிறது. வியாபாரிகள், கடைக்காரர்களும் போதைப் பொருளை விற்கமாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும்.  போதைப் பொருள்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே விற்பனையாகாமல் கண்காணிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகமானது, தனது எல்லைக்குள் இப்பொருள்களின் நடமாட்டத்தைத் தடுத்தாக வேண்டும். காவல் நிர்வாகமானது, போதை பொருள்களை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும். போதைப் பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்தாக வேண்டும். அவர்களது மொத்த சொத்துகளும் முடக்கப்பட வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போதையின் தீமையை மருத்துவர்கள், குறிப்பாக, மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும்.

    போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். போதை பொருட்கள் நடமாட்டம் பள்ளி, கல்லூரிகளில் இல்லாமல் கண்காணிக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். ஒரு சேர சமூகம் இயங்கினால் தான் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் செயல்பட முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: CM MK Stalin, DMK

    அடுத்த செய்தி