ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''ஆள வைத்தவரும்.. அடையாளம் காட்டியவரும் பெரியப்பாதான்..'' அன்பழகன் குறித்து மேடையில் உருகிய முதல்வர் ஸ்டாலின்!

''ஆள வைத்தவரும்.. அடையாளம் காட்டியவரும் பெரியப்பாதான்..'' அன்பழகன் குறித்து மேடையில் உருகிய முதல்வர் ஸ்டாலின்!

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

Stalin | சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கருணாநிதிக்கு பிறகு தம்மை தலைவராக அடையாளம் காட்டியவர் க.அன்பழகன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதி, க.அன்பழகன் இருவரின் நட்பும், நம்பிக்கையும் போல் அரசியல் வரலாற்றில் காண்பது அரிது என புகழாரம் சூட்டினார். தனது அரசியல் வாழ்க்கையே அன்பழகனிடம் இருந்து தான் தொடங்கியது என்றும், வாரிசு என்ற குற்றச்சாட்டைச் சிலர் சுமத்திய போது கல்வெட்டு போலப் பாராட்டியவரும் அன்பழகன்தான் என்றும் நினைவுக் கூர்ந்தார்.

மேலும் பேசிய முதல்வர், ஸ்டாலின் எனக்கும் வாரிசு என சான்றிதழ் கொடுத்தவர் என் பெரியப்பாவான பேராசிரியர். அண்ணா அறிவாலயத்தை ஆள வைத்ததும்; கழகத்தை ஆள வைத்ததும்; கோட்டைய ஆள வைத்ததும் என் பெரியப்பா தான். அவரின் பாராட்டுகளே என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளது என்றார்.

Also see... ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: இன்று முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

திராவிட முன்னேற்ற கழகத்தை கருணாநிதிக்குப் பிறகுச் சரியாக வழிநடத்தக்கூடியவர் ஸ்டாலின்தான் என்று முதலில் கூறியது அன்பழகன்தான் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

First published:

Tags: Anbazhagan, CM MK Stalin, DMK, DMK Karunanidhi, Tamil Nadu