ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை கார் வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை!

கோவை கார் வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏவுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை மாநகரின் பாதுகாப்பை வலியுறுத்த கூடுதலாக 3 காவல்நிலையம் அமைக்கவும் முடிவு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Coimbatore

    கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ALSO READ | தமிழ் எங்கள் அதிகாரம், இந்தி சர்வாதிகாரம்.. வைரமுத்து ஆவேசம்..!

    இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்றிட மத்திய அரசுக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார்.

    தொடர்ந்து, கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்பு கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று          (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.   இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும்  முதலமைச்சர்காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    புதிதாக மூன்று காவல் நிலையங்கள்

    மேலும்,  கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும்;  மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும்;  கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய  முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்;   மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும்;  இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும்  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: CM MK Stalin, Coimbatore, MK Stalin