துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கைத்தறி ஜவுளி, தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில், தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு பறைசற்றும் வண்ணம், காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்பட உள்ளன. 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்எல்ஏ உதயநிதி மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத் உள்ளிட்டோரும் துபாய் சென்றனர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இது அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாகும். துபாய் சென்றடைந்த முதலமைச்சரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி உள்ளிட்டோர் வரவேற்றனர். அந்நாட்டு அரசு அனுப்பிய BMW காரில் ஸ்டாலின் பயணம் செய்தார்.
அங்கு உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் திறந்துவைக்கிறார். தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை கலாசாரம், கைத்தறி, ஜவுளி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டில் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் திரையிடப்படுகிறது.
Must Read : காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் கல்லூரிகளுக்கான புதிய திட்டம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
தமிழகத்தில் உற்பத்தியாகும் மோட்டார் வாகனம், மின்சார வாகனம், காற்றாலைகள் உள்ளிட்டவற்றின் உருவகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.