பெண்களின் மீது கையை வைத்தவனின் விரலை வெட்டக்கூடாது, தலையை வெட்ட வேண்டும் என்ற பாகுபலி படத்தின் கதாநாயகனை போலான முதலமைச்சரை கொண்டுள்ளோம் என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேசினார்.
சட்டத்துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய பொன்னேரி சட்டமன்ற உறு.பினர் துரை சந்திரசேகர் பேசுகையில், "வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் ஆட்சி இது. இதுவும் காமராஜர் ஆட்சி தான்.
போக்சோ சட்டத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என திருத்தம் கொண்டு வரவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாகுபலி படத்தின் கதாநாயகனை போலான முதலமைச்சரை கொண்டுள்ளோம் என பெண்களின் மீது கையை வைத்தவனின் விரலை வெட்டக்கூடாது, தலையை வெட்ட வேண்டும் என்ற வசனத்தை கூறி புகழ்ந்தார்.
Also Read : தஞ்சை தேர் விபத்து.. செல்வப்பெருந்தகை பேச்சால் அவையில் காரசார விவாதம்
மேலும், பிறழ் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். வழக்கறிஞர்களுக்கு வங்கிகளில் கடன் கிடையாது. வாடகைக்கு வீடு கிடையாது. திருமணம் செய்வதற்கு பெண்கள் கூட கொடுக்க மறுக்கிறார்கள். மாநில அரசு மத்திய அரசிடம்நிதியுதவியை பெற்றோ, நிதியை உருவாக்கியோ விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்", என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.