• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மக்களை தேடி மருத்துவம் - புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவம் - புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

  • Share this:
    தமிழகத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் மாதம் தோறும் மருந்து மாத்திரைகள் வாங்கி் உட்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு இரண்டு முறை வரை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். பல்வேறு காரணங்களால் இந்த நோயாளிகளில் பலர், முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால், ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.

    எனவே இந்த மாதிரியான நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் நோக்கில், மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரி பகுதியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

    Also Read : தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கை: எப்போது வெளியீடு?

    அதன் மூலம், குறிப்பிட்ட நோயாளிகளுக்கு வீடு வீடாக சென்று மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவது, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கையடக்க கருவிகளுடனும், பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் பிசியோதெரபிஸ்டுகள் மூலமும், வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு கோடி பேர் பயனடைவர் என கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: