தாடி வைக்காத, தடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் - காங்கிரஸ் எம்.எல்.ஏ புகழாரம்

செல்வப்பெருந்தகை

தாடி வைக்காத, தடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்.

    யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். இதனால் பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். தமிழருக்கு எதிரான எல்லாவற்றையும் எதிரியாக கொண்டு செயல்பட்டார் பெரியார். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத பெரியாரால்தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதைதான் காரணம். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் அடையாளமாக சமூக நீதி நாளை கொண்டாடுவோம் என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்று பேசும்போது, பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார். நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த பெரியார் இல்லாவிட்டாலும் தாடி வைக்காத, தடி இல்லாத பெரியாராக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: