எதிர்க்கட்சித் தலைவரை விவாதத்திற்கு அழைத்த முதல்வர் - கராசார விவாதத்தை, முடித்து வைத்த சபாநாயகர்!

மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரை விவாதத்திற்கு முதல்வர் அழைத்ததும், பேரவை பரபரப்பானது, எனினும், அவை முன்னவர், சபாநாயகர் ஆகியோர் குறுக்கிட்டு விவாதத்தை முடித்து வைத்தனர்.

 • Share this:
  இந்து சமய அறநிலைய துறை, தொழிலாளர் நலத்துறை, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது.

  இந்த விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், நகைச்சுவை என்ற பெயரில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் தளபதி, தளபதி என்று கூறுகிறீர்களே அவர் எந்த படைக்குத் தளபதி என்று கேட்டு முடிந்தால் என் தொகுதியில் நின்று வென்று காட்டட்டும் என்று கூறினார். (முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மறைமுகமாக விமர்சித்தார்)

  அதற்கு பதில், இப்போது நான் கூறுகிறேன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தளபதியாக தலைமை ஏற்று, சாதாரண தொண்டனாக ஐட்ரீம்ஸ் மூர்த்தியை வைத்து அவரை எதிர்த்து நிற்க வைத்து வென்று காட்டிய தலைவர், இங்கே சாந்தமாக அமர்ந்திருக்கிறார். ஆனால் அவரிடம் சவால் விட்ட அந்த முகத்தை சட்டப்பேரவையில் காணவில்லை என்று தெரிவித்தார்.

  Also read: பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மானியக் கோரிக்கைக்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் 15 நிமிடம்தான் ஒதுக்கப்படுகிறது.
  எனவே குறித்த நேரத்திற்குள் பேச வேண்டும் என்பதை இப்போது பேசிய உறுப்பினர் அன்பழகனுக்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்றார்.

  குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,

  2017 ஆம் ஆண்டு ஆளுநர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார், அப்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என கூறினார்.

  தொடர்ந்து பேசிய முதல்வர்,

  விவாதம் செய்ய வேண்டாம் என்பதற்காக தான் உறுப்பினரை தடுத்து நிறுத்தினேன், நீங்கள் விவாதம் செய்ய தயார் என்றால் நாங்களும் தயார் என்று முதல்வர் தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன்,

  இந்த விவாதம் வேண்டாம் என்பதற்காக தான் முதல்வர் குறுக்கிட்டுப் பேசினார். அவருக்கு நீங்கள் நன்றிதான் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  உடனே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு இந்த விவாதத்தை முடித்து வைத்தார்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: