Home /News /tamil-nadu /

மலேசிய முன்னாள் அமைச்சர் சாமி வேலு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...

மலேசிய முன்னாள் அமைச்சர் சாமி வேலு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...


மலேசிய முன்னாள் அமைச்சர் சாமி வேலு மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

மலேசிய முன்னாள் அமைச்சர் சாமி வேலு மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 29 ஆண்டுகள் சாமி வேலு இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மலேசியாவில் இருக்கும் முக்கிய தமிழ் அரசியல் தலைவர் சாமி வேலு. மலேசியாவின் இபோ நகரில் 1936ம் ஆண்டு பிறந்து, 1959ம் ஆண்டு மலேசிய அரசியிலில் கால்பதித்தார். 1974ம் ஆண்டு முதல் 2008 வரை சுங்கை சிப்புட் எம்.பி.யாகவும், 1979 முதல் 1989 வரை பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1989 முதல் 1995 வரை எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சராக இருந்தார்.

    1979ம் ஆண்டு முதல் 31 ஆண்டுகள் கேபினட் அமைச்சராக சாமி வேலு இருந்துள்ளார்.தேர்தலி வெற்றி பெற்ற மக்கள் மனதில் இடம் பிடித்த சாமி வேலு மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 29 ஆண்டுகள் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை மலேசிய இந்திய காங்கிரசின் எஸ்.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார். சாமி வேலுவின் மறைவுக்கு மலேசியாவின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சாமி வேலு மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



    இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது என்றும்
    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் உணவு திட்டங்கள் குறித்த ஒரு வரலாற்று பார்வை

    மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

     
    Published by:Arunkumar A
    First published:

    Tags: CM MK Stalin, Malaysia

    அடுத்த செய்தி