கொரோனா விவகாரத்தில் முதல்வர் உண்மைக்கு மாறாக பேசுகிறார் - கே.என்.நேரு காட்டம்

கொரோனா விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறாக முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். 

கொரோனா விவகாரத்தில் முதல்வர் உண்மைக்கு மாறாக பேசுகிறார் - கே.என்.நேரு காட்டம்
கே.என்.நேரு
  • Share this:
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘கொரோனா பரவல் குறித்து தி.மு.க தலைவர் ஆரம்பத்திலேயே எச்சரித்தார். ஆனால், முதலமைச்சர் கேட்கவில்லை. கொரோனா தடுப்பு பணிகளை தாமதமாக மேற்கொண்டதே இவ்வளவு பாதிப்புகளுக்கு காரணம். முன்கூட்டியே  நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்கள். கொரோனா தடுப்பு பணிகளில் இந்த அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. தினம் தினம் அறிக்கை விடுகிறார் குறை சொல்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவரைக் குற்றம் சொல்கிறார்கள்.  எதிர்க்கட்சிக்கு ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டுக் காட்டுவதுதான் வேலை.

மாலை போட்டு, பாராட்டுவது இல்லை. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஆனால், முதலமைச்சர் உண்மைக்கு மாறாகவும் முன்னுக்கு பின் முரணானகவும் பேசுகிறார். வெளிநாடுகளில் அதிக அளவில் பரிசோதனை செய்வதால் கொரோனா தொற்றும் அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பரிசோதனையை குறைவாக செய்து விட்டு, கட்டுக்குள் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். பரிசோதனை அதிகம் செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதி கிடைக்கவில்லை. ஒன்றியங்களுக்கான செலவுகளை அவற்றின் தலைவர்கள் செய்ய முடிவதில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றி, அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி எங்களுடைய எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு உதவி செய்தோம். எங்களால் எந்த பாதிப்பு இல்லை.


குடிமராமத்து பணிகளை ஆயக்கட்டு விவசாயிகளைக் கொண்டு தூர் வாராமல் தொகுப்பு தொகுப்பாக செய்கிறார்கள். பணிகள் சரியாக நடக்கவில்லை. இன்னும் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. இயற்கையின் உதவி இருந்தால் முன் கூட்டியே திறக்கலாம். முன் கூட்டியே தண்ணீர திறந்தவர்கள், முன்கூட்டியே ஏன் தூர் வாரவில்லை?  என்றும் கேள்வி எழுப்பினார்.

‘80% தூர் வாரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறுகிய காலத்தில் எப்படி தூர் வார முடியும்? என்றார். மேலும், கிராமப்புறங்களில் அன்றாட விவசாயக் கூலித் தொழிலாளர்கள், நகர்ப்புறங்களில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு வருவாய் இழப்பு என்கிறார் முதலமைச்சர். ஆனால் தினமும் செய்தித்தாளில் டெண்டர் கோருவது எப்படி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading