சட்டசபையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை - முதல்வர் பழனிசாமி!

பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை - முதல்வர் பழனிசாமி!
முதல்வர்
  • Share this:
கொரோனா வைரஸ் தொடர்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதால் பேரவையை ஒத்திவைக்கவேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கொரோனா வைரஸ் காரணமாக பயமாக இருக்கிறது. வீட்டுக்கு போனாலும் உடனே குளிக்க சொல்கிறார்கள். எனவே போக போக தனிமைப்படுத்திவிடுவார்களோ என்ற நிலைமை இருக்கிறது. இப்படியான சூழலில் பேரவையை நடத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

அதை போல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமசாமியும், பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.


இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழு வீச்சுடன்  செயல்படுத்தி வருகிறது.

நோய் வருவது இயற்கை ஆனால் தற்போது வந்துள்ள வைரஸ் அபாயகரமான நோய் தான். இருந்தாலும் தேவையான நடவடிக்கைகள் பேரவையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அனைவரும் பரிசோதிக்கப்பட்டு தான் பேரவைக்கு வருகின்றனர். எனவே பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading