இந்தியாவில் அதிக விருது பெற்ற மாநிலம் தமிழகம் - முதல்வர் பழனிசாமி பெருமிதம்

இந்தியாவில் அதிக விருது பெற்ற மாநிலம் தமிழகம் - முதல்வர் பழனிசாமி பெருமிதம்

முதல்வர் பழனிசாமி

அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்றோம்.

 • Share this:
  இந்தியாவில் அதிக விருதுகள் பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்று கோவையில் 123 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை பச்சாபாளையத்தில் அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 123 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்ற சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகின்றது.

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

  இந்த திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்த நாளில் திருமணங்கள் நடத்தப்படுகின்றது. அதிமுகவில் மட்டும்தான் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறும். ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு இந்த திருமண மேடையே சாட்சி. திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் 6010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு வழங்கி இருக்கின்றது. இதுவரை 2,98,849 அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது

  திமுக அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றுவதில்லை. அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி. சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்றோம்.

  தமிழ்நாடு தொழில் துவங்க உகந்த மாநிலம் என்பதால் தொழில் முனைவோர் தொழில் ஆர்வமாக தமிழகம் வருகின்றனர். இந்தியாவில் அதிக விருது பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரமாக கோவை, சென்னை இருக்கின்றது“ என்றும் தெரிவித்தார்.

   
  Published by:Vijay R
  First published: