பாரம்பரிய உணவுகளுக்கு மாறுங்கள்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

உணவு பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, நம் முன்னோர் வழங்கிச்சென்ற பாரம்பரிய உணவை மீண்டும் உட்கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.

Web Desk | news18
Updated: September 13, 2019, 2:39 PM IST
பாரம்பரிய உணவுகளுக்கு மாறுங்கள்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
உணவு திருவிழாவை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்
Web Desk | news18
Updated: September 13, 2019, 2:39 PM IST
சென்னை தீவுத் திடலில், 3 நாட்கள் நடைபெறும் மதராச பட்டிணம் உணவு திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மதராச பட்டிணம் என்ற பெயரில் உணவு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள இந்த திருவிழாவில், சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு என 160 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


Also read... பேனர்: இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும்? - நீதிமன்றம் கண்டனம்

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தற்போது உணவு அலங்காரப்பொருளாகி விட்டதாகவும், வெளிநாட்டு உணவுகளுக்கு நாக்கு அடிமையாகிவிட்டதாகவும் வேதனைபட்டார்.

உணவு பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், நம் முன்னோர் வழங்கிச்சென்ற பாரம்பரிய உணவை மீண்டும் உட்கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.

Loading...

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...