வழிமுறைகளை திமுகவினர் பின்பற்றியிருந்தால் எம்எல்ஏ.வை இழந்திருக்க மாட்டோம் - முதல்வர்

அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்ய உள்ளதாக மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

வழிமுறைகளை திமுகவினர் பின்பற்றியிருந்தால் எம்எல்ஏ.வை இழந்திருக்க மாட்டோம் - முதல்வர்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு முன்னதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு காணொலி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்துள்ள பணிகளையும் தொடங்கி வைத்தார். கோவையைச் சேர்ந்த தொழில் துறையினருடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோவை மாவட்டம் சிறப்பாக பணியாற்றி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் பழனிசாமி சேலத்திற்கு மட்டும் முதல்வரா என கேள்வி எழுப்பிய ஸ்டாலினின் கேள்விக்கு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.Also read... ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்காமல், தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்வதாக நாடகமாடி வருவதாகவும், அதனால் தொற்று பரவல் அதிகரிப்பதாகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பின்னர், சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழப்பு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன் வந்து வழக்கு விசாரித்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் எனவும் தெரிவித்தார்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading