கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசின் சார்பில் மேலும் 5 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவுக்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரண நிதியை கடந்த 10-ம் தேதி அளித்ததை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, கேரள மாநிலத்திற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது கேரளாவில் நிலவும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 15,000 லிட்டர் பால், வேட்டிகள், கைலிகள், 10,000 போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன், மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.