காட்டுமன்னார்கோவில் வெடிவிபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் - தமிழக அரசு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன், குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி

 • Share this:
  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம், பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  முதல்வர் அறிக்கை


  'துயரச் செய்தி அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளேன்’ என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குருங்குடி கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்து குறித்து வெளியாகியுள்ள தமிழக முதல்வர் அறிக்கையில், ’ஏழு பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன், குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
  Published by:Gunavathy
  First published: