அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுகளை எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா!

விருது வழங்கும் மு.க.ஸ்டாலின்

மருத்துவர் தினத்தன்று, மருத்துவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள எடுத்து, முதல்வரிடம் கொடுத்த பெண் அரசு ஊழியருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 • Share this:
  உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனா பாதிப்புகளைக் உலகம் மீள்வதற்கு தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உலக அளவில் பொதுமக்களைக் கடந்து அரசியல் தலைவர்கள், நாட்டின் பிரதமர், அதிபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

  இந்தநிலையில், தேசிய மருத்துவர் தின விழா நேற்றைக்கு முந்தைய தினம், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கிய மருத்துவர்களைப் பாராட்டும் விதமாக, அரசு சார்பில், விருதுகளையும், சான்றிதழ்களையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

  அப்போது முதல்வர் வழங்குவதற்கான விருதுகளை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் பணி புரியும் பெண் ஒருவர், மருத்துவருக்கான விருதுகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம், நேரடியாக எடுத்து கொடுத்துள்ளார். முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால், அதிகப்படியானோர் கொரோனா RT PCR பரிசோதனை மேற்கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், விருதுகளை எடுத்து கொடுத்த அப்பெண்ணுக்கு லேசான அறிகுறி இருந்ததால், RT PCR பரிசோதனை எடுத்துள்ளார். அதன் முடிவு நேற்று மாலை கிடைக்கப் பெற்றதில், முதல்வரிடம் விருதுகளை எடுத்து கொடுத்த அப்பெண்ணுக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயகுநரகத்தில், நேற்று மாலை கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: