முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய இந்த மனு மீது விசாரணை நடத்தியது, அப்போது, பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
மத்திய அரசு, தமிழக அரசு, பேரறிவாளன் தரப்பு வாதங்களைக் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தது. இந்தநிலையில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனையடுத்து, பேரறிவாளன் விடுதலைத் தீர்ப்பை தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் வெடிவெடித்து கொண்டாடினர்.
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 18, 2022
காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் பேரறிவாளன் விடுதலையை வரவேற்றுனர். இந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேரறிவாளனிடமும், அற்புதம்அம்மாளிடமும் பேசியுள்ளார். அப்போது அவர், ‘பேரறிவாளனிடமும், அற்புறம்அம்மாளிடம் வாழ்த்துகள் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.