Home /News /tamil-nadu /

நீட் விலக்கு மசோதா: தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டம்- சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

நீட் விலக்கு மசோதா: தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டம்- சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதா குறித்து தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு விலக்கு அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 18-ம் தேதி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர், நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திவந்தார். அதனையடுத்து, பிப்ரவரி 3-ம் தேதி நீட் மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் அதனை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தினார். அதனையடுத்து, பிப்ரவரி 8-ம் தேதி நீட் விலக்கு மசோதாவுக்காக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் கூடி மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    தற்போது, வரையில் ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கவில்லை. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கடந்த 210 நாட்களாக நீட் விலக்கு சட்ட மசோதா கிண்டி ஆளுநர் மாளிகையில் முடங்கி கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் ஒரு மனதாக கொண்டுவரப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா கிண்டி ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

    அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் தேனீர் விருந்தில் கலந்து கொள்வது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருக்கும், சட்டமன்ற மான்பினை சிதைப்பதாக இருக்கும் . அதனால் பங்கேற்கவில்லை என்று கடிதம் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    ஆளுநருக்கும் எனக்கும் சுமூகமான உறவு உள்ளது.. அவருக்கு மரியாதை கொடுப்போம்... முதல்வர் மு.க. ஸ்டாலின்

    தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டுகளை விட தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மை, பலன் முக்கியமானது. இந்த சட்டமன்ற மாண்பை, தமிழ்நாட்டு மக்கள் உணர்வை மதித்து நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது இந்த தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக் கூடிய செயல்.

    நீட் விலக்கு மசோதா பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி இன்றுடன் 70 நாள் ஆகிறது. அதை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதை பார்த்து தேவைபட்டால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி அடுத்த கட்டம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MK Stalin, Neet Exam

    அடுத்த செய்தி