மாறி வரும் காலநிலை மாற்றங்களும், நாகரீக வாழ்க்கையை முறையும், எதிர்காலத்தில் உண்ணும் உணவே நஞ்சாகக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கு தீர்வாக சிக்கிம் மாநிலத்தில் ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லிகள் கலப்பு இன்றி இயற்கை முறையில் அனைத்து விவசாயங்களும் மேற்கொள்ளப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடும், 31,629 ஹெக்டரிலான அங்கக வேளாண் பரப்பினைக் கொண்டு தேசிய அளவில் 14வது இடத்தில் உள்ளது. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருள்களின் பயன்பாட்டை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கிறது. அதிக வாய்ப்புள்ள பயிர்களுக்கு அதிக வாய்ப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தப்பட உள்ளது. உதாரணத்துக்கு டெல்டா மாவட்டங்களில் நெல், ஈரோடு, கடலூரில் கரும்பு என அங்கக விவசாயம் ஊக்குவிக்கப்படும். மேலும், பாரம்பரிய விதைகள், அங்கக உத்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் உரங்களை மானிய விலையில் வழங்கப்படுவதோடு, பயிர் கடனும் உரிய இழப்பீடுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், அங்கக வேளாண் குழுக்களை ஒருங்கிணைத்து, அங்கக வேளாண் மண்டலங்கள் உருவாக்கவும் இக்கொள்கை மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அங்கக உணவுத்திருவிழாக்களை மாவட்டம் தோறும் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ- பா.ஜ.க நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Organic Farming