முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாரதி வேடமணிந்து சாலையில் நின்ற பள்ளி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்ட முதல்வர்

பாரதி வேடமணிந்து சாலையில் நின்ற பள்ளி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்ட முதல்வர்

மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலையில் நின்ற பள்ளி குழந்தைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

  • Last Updated :

கோவில்பட்டி அருகே பாரதி வேடமணிந்து சாலையில் நின்ற பள்ளி குழந்தைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விட்டு, சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் முதல்வர் செல்லும் வழியில் தமிழ் பாப்திஸ்து தொடக்க பள்ளி குழந்தைகள் பாரதியார் வேடமணிந்து நின்று கொண்டு இருந்தனர்.

குழந்தைகள் நிற்பதை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி குழந்தைகளுடன் சில நிமிடங்கள் உரையாடினார். நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி விட்டு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.

Also read: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

First published: