Home /News /tamil-nadu /

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின், மோடி

மு.க.ஸ்டாலின், மோடி

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நடைபெறவுள்ள பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘காவிரி கரையில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா மாநிலம் அளித்த திட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு ஜூன் 17-ம் நான் உங்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.

    அதேபோல, கர்நாடகா அரசு மேகதாது அணைத் திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு எதிராக இந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று எங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மேற்கூறிய கருத்துகள் இருக்கும்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெறவுள்ள 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணைத் திட்டத்தின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த முடிவு தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுடைய மாநிலம், குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்கும் காவிரியைச் சார்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு வழங்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Mekedatu dam, MK Stalin

    அடுத்த செய்தி